லண்டனை விட்டு வரிசையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்: வெளியான காரணம்
லண்டனை விட்டு வெளியேறும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மாஸ்கோவைத் தவிர வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது என புதிய புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.
12 சதவீதத்தை இழந்துள்ளது
வெளியான புதிய அறிக்கை ஒன்றில், முதன்மையான 50 நகரங்கலில் லண்டன் உள்ளிட்ட இரண்டு நகரங்கள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான எண்ணிக்கையில் பணக்காரர்களைக் கொண்டுள்ளது.
வரி அதிகரிப்பு, பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பவுண்டின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இந்த சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இரண்டு பெரும் கோடீஸ்வரர்களையும் 100 மில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்ட ஒருவரையும் லண்டன் இழந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2014 முதல் லண்டன் அதன் பணக்கார குடியிருப்பாளர்களில் 12 சதவீதத்தை இழந்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 30,000 கோடீஸ்வரர்கள் லண்டனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஆனால் இதே காலகட்டத்தில் மாஸ்கோவில் இருந்து 10,000 கோடீஸ்வரர்கள் மட்டுமே வெளியேறியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில், தற்போதைய லேபர் கட்சி அரசாங்கத்தின் கீழ் பிரித்தானியா அதன் மில்லியனர்களில் ஐந்தில் ஒரு பங்கை இழக்க நேரிடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தனர்.
இதற்கு முதன்மையான காரணம் வரி விதிப்பு மட்டுமே என குறிப்பிட்டுள்ளனர். வெளியான தரவுகளின் அடிப்படையில் 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட பிரித்தானியக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2028ல் 4.55 சதவீதத்தில் இருந்து 3.62 சதவீதம் என சரிவடையும் என்றே தெரிய வந்துள்ளது.
40 சதவீத வரி
புதிய விதிகளின்படி, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவில் வசித்து வரும் எந்தவொரு பணக்கார வெளிநாட்டினரும், தங்கள் உலகளாவிய வருவாயில் பிரித்தானியாவுக்கு வருமான வரி மற்றும் சொத்துக்களின் ஆதாய வரிகளை செலுத்த வேண்டும்.
ஆனால் இதற்கு முன்னர் ஆண்டுக்கு 30,000 பவுண்டுகள் மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதுமானதாக இருந்தது. மேலும், பிரித்தானியாவில் வசிக்கும் காலம் மொத்தம் அவர்களின் உலகமெங்கிலும் உள்ள சொத்துக்களுக்கு 40 சதவீத வரி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, பெரும்பாலான பணக்காரர்கள் போர்த்துகல், செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், ஸ்பெயின், கிரீஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இங்கெல்லாம் மிக மிக குறைந்த வரி மட்டுமின்றி, குறிப்பிட்ட தொகையை செலுத்துவதன் ஊடாக வரி விதிப்பில் இருந்தும் தப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |