இக்கட்டான சூழ்நிலையில்... மில்லியன் கணக்கான பிரித்தானிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு 4 சதவீத ஊதிய உயர்வு போரிஸ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை ஊழியர்கள் சராசரியாக 4.5 சதவீத ஊதிய உயர்வைப் பெறுவதற்கான சுயாதீனமான பரிந்துரைகளை அரசாங்கம் இன்று ஏற்றுக்கொண்டது.
மட்டுமின்றி சில ஊழியர்கள் அதிகமான ஊதிய உயர்வைப் பெற்றுள்ளனர். மேலும், அனைத்து காவல்துறை அதிகாரிகளும் செப்டம்பர் மாதத்திலிருந்து அவர்களின் ஊதியம் 1,900 பவுண்டுகள் வரையில் அதிகரிக்க உள்ளது.
மட்டுமின்றி, NHS மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் 4.5% வரையில் ஊதிய உயர்வை பெறுவார்கள். சுகாதார சேவையில் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள் - போர்ட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் - 9.3% வரை ஊதிய உயர்வை பெறுவார்கள்.
மேலும், செவிலியர்களுக்கான சராசரி அடிப்படை ஊதியம் சுமார் 35,600 பவுண்டுகளில் இருந்து சுமார் 37,000 பவுண்டுகள் என அதிகரிக்கும்.
இதற்கிடையில், புதிதாக தகுதி பெற்ற செவிலியர்களுக்கான அடிப்படை ஊதியம் 5.5% உயரும்.
ஆனால் இந்த ஊதிய உயர்வானது போதுமானதாக இல்லை என தொழிற்சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
மேலும், எந்த ஊதிய உயர்வும் நாட்டின் தற்போதைய பணவீக்கத்திற்கும் மேலாக இருக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.