மிகவும் நேர்மையான அரசாங்கம்... பெரும் சலசலப்பை ஏற்படுத்திய சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனின் கைது

Singapore
By Arbin Jan 18, 2024 03:20 AM GMT
Report

மிகவும் நேர்மையான நிர்வாகம் என கொண்டாடப்படும் சிங்கப்பூர் அரசாங்கத்தில், அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் கைதாகியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் வழக்கில் கைது

சிங்கப்பூர் அரசாங்கத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 27 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் நேர்மையான அரசாங்கம்... பெரும் சலசலப்பை ஏற்படுத்திய சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனின் கைது | Minister Iswaran Stand Trial Corruption Case @facebook

இதில் மக்கள் சேவையில் இருந்துகொண்டு ஆதாயம் பெற்றுள்ளார் என 24 குற்றச்சாட்டுகளும், ஊழலில் ஈடுபட்டார் என இரண்டு குற்றச்சாட்டுகளும், நீதி விசாரணையை தடுக்க முயன்றார் என ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொடர்புடைய 27 குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் ஈஸ்வரன் மறுத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் பெரும் தொழிலதிபர் Ong Beng Seng ஆகிய இருவரின் கைது நடவடிக்கையானது சிங்கப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

மட்டுமின்றி, இந்த இருவருமே கடந்த 2008ல் Formula One Grand Prix போட்டிகளை சிங்கப்பூருக்கு அறிமுகம் செய்தவர்கள். ஊழல் வழக்கில் சிக்கி அமைச்சர் ஈஸ்வரன் கைதான நிலையில், விசாரணை முடியும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியிருக்க கோரப்பட்டுள்ளது.

இருப்பினும் மாத சம்பளமான 3,500 பவுண்டுகள் (S$6,000) தொகையை தற்போதும் பெற்று வருகிறார். அமைச்சராக பொறுப்பில் இருந்த போது அவர் மாதம் S$46,750 தொகையை சம்பளமாக பெற்று வந்தார்.

மாத சம்பளத்தில் 82 சதவிகிதம்

ஆனால் தற்போது ஊழல் வழக்கில் அவர் கைதான நிலையில், அவரது மாத சம்பளத்தில் 82 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரை பொறுத்தமட்டில் அமைச்சர்களுக்கு உலகிலேயே அதிக தொகையை மாத சம்பளமாக வழங்குகின்றனர்.

மிகவும் நேர்மையான அரசாங்கம்... பெரும் சலசலப்பை ஏற்படுத்திய சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனின் கைது | Minister Iswaran Stand Trial Corruption Case @getty

சராசரியாக ஒரு அமைச்சர் மாதம் தோறும் 35,000 டொலர் சம்பளமாக பெறுகிறார். ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்கவே, அமைச்சர்களுக்கு மிக அதிக தொகையை சம்பளமாக வழங்குவதாக அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிறது.

1997ல் சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான எஸ் ஈஸ்வரன், கடந்த 2011ல் அமைச்சராக பொறுப்பேற்றார். வர்த்தகம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக செயல்பட்ட அவர், மிக சமீபத்தில் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

1986ல் இது போன்று ஊழல் வழக்கில் சிக்கி விசாரணையை எதிர்கொண்ட சிங்கப்பூர் அமைச்சர் Teh Cheang Wan என்பவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US