திருமணத்துக்கு வந்திருக்கிறீர்களா.. சம்பளம் யார் கொடுக்கிறார்? பொலிஸை கண்டித்த அமைச்சரின் மனைவி
தன்னை காத்திருக்க வைத்த பொலிஸ் அதிகாரியை அமைச்சரின் மனைவி கண்டிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் மனைவி
ஆந்திர மாநில அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி மனைவி ஹரிதா ரெட்டி. இவர், ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செல்லும் வழியில் தன்னை அரை மணிநேரம் காக்க வைத்ததாக கூறி ராமேஷ் என்ற பொலிஸ் அதிகாரியை காரில் இருந்தவாறே கண்டித்துள்ளார்.
தற்போது, இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர், "இன்னும் விடியவில்லையா? எந்த மாநாட்டை நடத்துகிறீர்கள்?
திருமணத்துக்கு வந்திருக்கிறீர்களா அல்லது கடமைக்காக வந்திருக்கிறீர்களா? நான் உங்களுக்காக அரைமணிநேரம் காத்திருந்தேன்.
உங்களுக்கு சம்பளம் யார் கொடுக்கிறார்கள். அரசா அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரஸா?” என்று கூறி பொலிஸ் அதிகாரியை கண்டித்தார்.
இதன்பின்னர், அந்த காவல் அதிகாரி ஹரிதா ரெட்டிக்கு சல்யூட் அடித்து, கான்வாய் வாகனத்தை வழிநடத்த முன்னோக்கி சென்றார்.
இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பதிவில், "அமைச்சரின் மனைவியும் அமைச்சர் போன்று அதிகாரத்தை விரும்புகிறார். அவர் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கிறார்" என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |