மோடி உலகில் உண்மையை அழிக்கலாம்.. ஆனால்! அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட கருத்துக்கு ராகுல் காந்தி பதில்
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ராகுல் பேசியது
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவர் பேசுகையில், "மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். ஆனால் எதார்த்தமான உலகில் அப்படி அல்ல, உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது.
நான் எதை சொல்ல நினைத்தேனோ அதனை தான் சொன்னேன். அது தான் உண்மை. அவர்கள் எதை வேண்டுமானாலும் அழிக்கலாம். ஆனால், உண்மை உண்மை தான்" என்றார்.
முன்னதாக, நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது பேசிய ராகுல் காந்தி, " தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய்களை மட்டுமே பேசுகிறார்கள்.
இவர்கள் அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.
பல துறைகளில் கால் பதித்தவர்.. பல மொழிகளை பேசுபவர்.., தற்போது தமிழக மருத்துவத்துறை செயலாளர்: யார் அவர்?
அதோடு, அக்னி பாதை திட்டம், சிறுபான்மையினர், நீட் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, அதானி மற்றும் அம்பானி குறித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.
இதில், அக்னி பாதை, அதானி, அம்பானி மீதான விமர்சனம், பாஜக சிறுபான்மையினருக்கு செய்யும் அநீதி ஆகியவை பற்றி ராகுல் காந்தி பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |