தற்குறியாக சிலர் விமர்சனம் செய்கின்றனர்- விஜயை மறைமுகமாக சாடிய தமிழக அமைச்சர்
சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் சென்னை கொளத்தூரில் உள்ள 10 கருணை இல்லங்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் விஜயை மறைமுகமாக சாடி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது..,
"தமிழகத்தின் அரசியல் தெரியாமல் இருக்கும் சிலருக்கு 2026 தேர்தலில், திமுக 200 அல்ல 234 தொகுதிகளையும் கைப்பற்றும். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு. அது யாராவது குறையும் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும்.
அடுக்கடுக்கான திட்டங்களை ஆட்சியில் அள்ளிக் கொடுக்கிற முதல்வரை பார்த்து, இல்லையென்று கூறுகின்ற கூட்டம் இருக்கிறது.
வன்புணர்வு குற்றச்சாட்டுகள் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வழக்கு பதிவு செய்வதோடு மட்டுமில்லாமல் நீதி பெற்று தரும் நீதி தேவனின் ஆட்சி நடைபெறுகிறது.
திமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு. திமுக இருநூறு தொகுதியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் நிலைப்பாடு 200 அல்ல 234 தொகுதிகளையம் திமுக கூட்டணி கைப்பற்றும்" என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |