அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி அதிரடி நீக்கம்: ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
தமிழகத்தின் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர், இதன் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
ஆனால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.
அமைச்சரவையில் இருந்து நீக்கம்
இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.”
அத்துடன் அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது விசாரணைக்கு இடையூறாக இருக்கும் எனவும் அதில் ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |