இன்னும் 6 நாள்களில் அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் - அண்ணாமலை காட்டம்
சனாதன ஒழிப்பு கூட்டத்தில் பங்கேற்ற தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செப்டம்பர் 10 ஆம் திகதிக்குள் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசிய கருத்து இந்தியா முழுவதும் எதிரொலித்த நிலையில், தற்போது பாஜகவின் கவனம் தமிழக இந்து சமய அறநிலைத்துறை மீது போயுள்ளது.
சேகர் பாபு பதவி விலக வேண்டும்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார். அங்கே அவர், இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அமைச்சர் சேகர் பாபு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். அவர், செப்டம்பர் 10 ஆம் திகதிக்குள் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகும் இவருக்கு அங்கு என்ன வேலை.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர் பாபு விலகாவிட்டால், செப்டம்பர் 11 ஆம் திகதி சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகங்களின் முன்பு முற்றுகை இடுவோம்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |