சனாதனம் குறித்து நான் பேசியது சரிதான்! வழக்கு போட்டால் சந்திக்க தயார் - உதயநிதி ஸ்டாலின்
சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அமைச்சர் தான் பேசியது சரிதான் என்று கூறியுள்ளார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும்
சமீபத்தில், சென்னையில் நடந்த மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,"கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.
அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன.
நான் பேசியது சரி தான்..
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து நான் பேசியது சரிதான் என்றும், இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதை திசைதிருப்பவே பாஜக திரித்து பேசி வருகின்றனர் என்றும்" கூறியுள்ளார்.
மேலும், "எதுவும் மாறக்கூடாது, எல்லாமே நிலையானது என்பது தான் சனாதனம் என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லோருக்குமே எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல். முதலில் பெண்கள் படிக்க கூடாது என்றும், மேலாடை அணியக்கூடாது என்றும், கோயில்களுக்கு வரக்கூடாது என்றும் கூறினார்கள்.
ஆனால், நாம் அதை மாற்றி இருக்கிறோம். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க தயார்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |