அமைச்சர் உதயநிதி GROUP 4 தேர்வு எழுதி வெற்றி பெறட்டும் பார்ப்போம்! அண்ணாமலை கிண்டல்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பதவியை துறந்துவிட்டு குரூப்-4 தேர்வு எழுதி வெற்றி பெறட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
உதயநிதிக்கு அண்ணாமலை சவால்
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், பாஜக கட்சி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்த போது,"என் மண், என் மக்கள் பாதயாத்திரை எழுச்சியாக இருக்கிறது. அரசு திட்டங்களில் திமுக அரசு கொள்கைகளை திணிக்கிறது. நீட் தேர்வு விடயத்தில் திமுக சிக்கலில் மாட்டியுள்ளது.
ஆளுநர் பதவி பற்றி பேசும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பதவியை துறந்துவிட்டு குரூப்-4 தேர்வு எழுதி வெற்றி பெறட்டும் பார்ப்போம். வரும் தேர்தலில் திமுகவையும், பாஜகவையும் மக்கள் தராசு தட்டில் வைத்து வாக்களிப்பார்கள்" என்றார்.
ரஜினி செய்தது தவறில்லை
மேலும் பேசிய அவர்,"உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்தது ஒன்றும் தவறில்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சி தமிழகத்தில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும்" என்றார்.
அண்ணாமலை கடந்த மாதம் 28 ஆம் திகதி தொடங்கிய முதற்கட்ட பாதயாத்திரை நிறைவு பெற்ற நிலையில், 2-வது கட்டமாக வருகிற 3 ஆம் திகதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |