அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்: அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி
இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவுமாறு அவரது தந்தை இந்திய அரசைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய அமைச்சர் ஒருவர், நிகிதா உடலை இந்தியா கொண்டுவருவது தொடர்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய இளம்பெண் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமானார்.

ஜனவரி மாதம் 2ஆம் திகதி, அர்ஜூன் ஷர்மா என்னும் நபர், நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.
நிகிதாவை தீவிரமாகத் தேடிவந்த பொலிசார், ஜனவரி மாதம் 3ஆம் திகதி, அர்ஜூன் வாழ்ந்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே நிகிதாவின் உயிரற்ற உடலைக் கண்டு பிடித்தார்கள்.
அர்ஜூன் தலைமறைவாகிவிட, அமெரிக்க பொலிசார், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருந்தார்கள்.
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி
இதற்கிடையில், நிகிதாவின் தந்தையான ஆனந்த் (Anand Godishala), தனது மகளுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர, மத்திய அரசும் மாநில அரசும் உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
Sharing an update concerning the unfortunate demise of Ms. Nikitha Godishala in Maryland, USA: All required procedures have now been completed, and the mortal remains are expected to be flown to India either today or tomorrow.@MEAIndia https://t.co/T7QFW8So0P pic.twitter.com/DK2FaQWLse
— G Kishan Reddy (@kishanreddybjp) January 6, 2026
இந்நிலையில், இந்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சரான ஜி. கிஷன் ரெட்டி, நிகிதாவின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துள்ளதாகவும், இன்று அல்லது நாளை அவரது உடல் இந்தியா வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தகவல்
தற்போது, நிகிதா வழக்கு தொடர்பில் மேலும் ஒரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
ஆம், நேற்று முன்தினம், அதாவது, ஜனவரி மாதம் 7ஆம் திகதி, திங்கட்கிழமை, இந்தியாவின் தமிழ்நாட்டில் அர்ஜூன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |