Live: தவெக தலைவர் விஜய் உடன் இன்று அமைச்சர்களாகும் 9 பேர்
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கும் நிலையில், அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
8 பேர் வரை
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 ஆசனங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மாறியது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை இல்லை என்பதால் கடந்த 5 நாட்களாக போராடி பிற கட்சிகளின் ஆதரவை பெற்று தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பொறுப்புக்கு வர இருக்கிறார்.

இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
விஜய் உடன் இன்று முதற்கட்டமாக குறைந்தபட்சம் 8 பேர் வரை அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ள தகவலில், புஸ்ஸி ஆனந்த் - சென்னை தி நகர் எம்எல்ஏ, ஆதவ் அர்ஜூனா - சென்னை வில்லிவாக்கம் எம்எல்ஏ,

கேஜி அருண் ராஜ் - திருச்செங்கோடு எம்எல்ஏ, பி வெங்கடரமணன் - மயிலாப்பூர் எம்எல்ஏ, சிடிஆர் நிர்மல் குமார் - திருப்பரங்குன்றம் எம்எல்ஏ, ராஜ்மோகன் - சென்னை எழும்பூர் எம்எல்ஏ, டிகே பிரபு - காரைக்குடி எம்எல்ஏ, எஸ் கீர்த்தனா - சிவகாசி எம்எல்ஏ ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |