காசாவில் மருத்துவமனைக்கு வெளியே வந்த ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ஆம்புலன்ஸ் கான்வாய் மீது இஸ்ரேல் தாக்கியதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா நகரின் பிரதான மருத்துவனையில் பலத்த காயமடைந்த பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்காக காத்திருந்த ஆம்புலன்ஸ் கான்வாய் மீது இஸ்ரேலிய விமானம் தாக்குதல் நடத்தியதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் டஜன் கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ராஃப் அல்-கிட்ரா கூறுகையில்,
'அல்-ஷிஃபா மருத்துவமனையின் கதவுக்கு வெளியே ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு கான்வாய் இலக்கு வைக்கப்பட்டது' என்றார். எனினும், இச்சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
இந்தத் தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோவில் ஆம்புலன்ஸ் கடுமையாக சேதமடைந்துள்ளதும், நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதும் காட்டப்பட்டுள்ளது. ஆனால், காசாவின் சுகாதார அமைச்சகத்தின் தாக்குதல் தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |