அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு: தாக்குதல்தாரி உட்பட 3 பேர் பலி: காவலர்கள் காயம்
Minneapolis Apartment Shooting 3 dead: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம்
புதன்கிழமை மதியம் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகர மையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவத்தில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபரும் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த 3 காவல்துறை அதிகாரிகள் இதில் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 3 காவல்துறை அதிகாரிகளும் தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்து சீரான உடல் நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
விசாரணையில் பொலிஸார்
மினியாபொலிஸ் மாவட்ட மையத்திற்கு அருகில் அமைந்துள்ள துப்பாக்கிச் சூடு அரங்கேறிய அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிய பகுதிகள் முழுவதையும் பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கியுடன் நிற்பது பதிவாகியுள்ளது.
இதில் மேலும் 7 பேர் ஹென்னபின் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |