இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி
அமெரிக்காவின் மினியாபொலிஸ் பகுதியில், பாடசாலை சிறார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், ட்ரம்பை கொல்ல வேண்டும் என தமது துப்பாக்கியில் எழுதி வைத்திருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மூன்று துப்பாக்கி
புதன்கிழமை நடத்தப்பட்ட அந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர்கல் காயங்களுடன் தப்பியுள்ளனர். தாக்குதல்தாரி 23 வயதான ராபின் வெஸ்ட்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது மூன்று துப்பாக்கிகளைப் பயன்படுத்திய அந்த நபர், அன்னுன்சியேஷன் கத்தோலிக்கப் பள்ளியின் தேவாலயத்தின் மீது டசின் கணக்கான சுற்றுகளைச் சுட்டுள்ளார்.
பின்னர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, அவர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வெஸ்ட்மேன் என்பது பெண்கள் பெயரை குறிப்பிடுவதால், 2020ல் அவர் ராபின் என்பதுடன் வெஸ்ட்மேன் என பெயரை மாற்றிக்கொண்டுள்ளதும் நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
மட்டுமின்றி, Robin W என்ற யூடியூப் சேனலில் அவர் தாக்குதல் நடத்தும் முன்னர் இரண்டு காணொளிகளை பதிவேற்றம் செய்துள்ளார். 10 நிமிடங்கள் நீளும் அந்த காணொளியில் அவர் தம்மிடம் இருக்கும் துப்பாக்கிகள் தொடர்பில் பதிவு செய்துள்ளார்.
இந்தியா மீது
அந்த துப்பாக்கிகளில் டொனால்ட் ட்ரம்பை கொல்ல வேண்டும், ட்ரம்பை கொல்ல வேண்டும், இஸ்ரேல் வீழ்ச்சி உறுதி, இஸ்ரேலை கொளுத்துங்கள் என்பது போன்ற வாசகங்களை எழுதியிருந்தார்.
ஒரு துப்பாக்கியில் இந்தியா மீது அணு குண்டு வீச வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வெஸ்ட்மேன் சட்டப்பூர்வமாக ஆயுதங்களை வாங்கியதாகவும், அவருக்கு எந்த குற்றவியல் பின்னணியும் இல்லை என்றும், தனியாக செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், துக்கத்தின் அடையாளமாக நாடு முழுவதும் அமெரிக்கக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது ஜனவரி முதல் இதுவரை பதிவான 146வது சம்பவம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |