இலங்கை விக்கெட் கீப்பர் சொன்ன பக்கா பிளான்! அப்படியே கேட்ச் கொடுத்து வெளியேறிய சஞ்சு சாம்சன் வீடியோ
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் அவுட் ஆகும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி நடைபெற்று முடிந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைகைப் பற்றியதால், இலங்கை அணி கடும் விமர்சனத்திற்குள்ளானது.
அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற குறிக்கோளோடு இறங்கியது. அதன் படி இந்தியாவை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான Minod Bhanuka செயல்பாடு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.
ஏனெனில், ஆட்டத்தின் 19-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் Praveen Jayawickrama வீசுகிறார். அப்போது இந்திய அணியின் முக்கிய வீரரான சஞ்சு சாம்சன் 46 ஓட்டங்கள் அடித்த நிலையில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதனால், அவரது பேட்டிங் நுணுக்கங்களை அப்போது வரை கண்ட விக்கெட் கீப்பர் Minod Bhanuka, சிங்கள் மொழியில், பந்து வீசும் Praveen Jayawickrama, சஞ்சு சாம்சனின் கால் நகர்த்தல்களைப் பற்றி கூற, அதற்கு ஏற்ற வகையில் பீல்டிங்கும் நிறுத்தப்பட்டது.
அதன் படி அடுத்த பந்தை Praveen Jayawickrama வீச, அதை இறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முற்பட்டு, சஞ்சுசாம்சன், Avishka Fernando-விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இலங்கை ரசிகர்கள் சிலர் இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, இது தான் ஒரு நல்ல விக்கெட் கீப்பருக்கான அடையாளம் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.