ரஷ்யா மீறியுள்ள Minsk ஒப்பந்தம் என்பது என்ன: அவை கூறும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடந்த திங்கள்கிழமை உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதியான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுகந்திர பகுதிகளாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருவதுடன் பல தலைவர்களும் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Minsk ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியுள்ளதாக தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகள், ரஷ்யாவை உக்ரைனுக்குள் நுழையக்கூடாது எனவும், ரஷ்யா மற்றும் உக்ரைன் என இருநாடுகளும் கிழக்கு உக்ரைனின் ரஷ்ய கிளர்ச்சியர்கள் அதிகம் உள்ள பதற்றமான பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக போடப்பட்ட Minsk ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskiy 2015ம் ஆண்டு போடப்பட்ட Minsk ஒப்பந்தத்தில் உள்ள வெளிநாட்டு ஆயுத அமைப்புகளையும், இராணுவ உபகரணங்கள் மற்றும் கூலிப்படைகளையும் திரும்பப் பெறுதல் என்ற 10வது புள்ளி கொள்கையை சுட்டிக்காட்டி ரஷ்யாவின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல தலைவர்களும் ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, அவர்கள் சுட்டிக்காட்டும் Minsk ஒப்பந்தம் என்றால் என்ன?, அது விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
முதல் Minsk ஒப்பந்தம் 2014 : கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகிய இரு பகுதிகளிலும் ரஷ்ய மொழி பேசும் கிளர்ச்சியாளர்களால் பெரும் கலவரம் ஏற்பட்டு சுமார் 2600 பேர் கொல்லப்பட்டனர்.
ஆனால் அதை உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskiy மறுத்துரைத்து சுமார் 15,000 நபர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் ஏற்பட்ட போர் பதற்றம் மற்றும் கலவரங்களை நிறுத்துவதற்காக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போடப்பட்ட 12 கொள்கைகள் கொண்ட ஒப்பந்தம் ஒன்று 2014ஆம் ஆண்டு பெலாரஸ் தலைநகரில் உருவாக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் படி, கைதிகளை திரும்பி அளித்தல், ராணுவ கனரக வாகனங்களை திரும்ப ஒப்படைத்தல் மற்றும் மனிதாபிமான செயல்களை மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய அம்சங்களாக பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த ஒப்பந்தம் முறையாக கடைபிடிக்கப்படாததால், அப்பகுதியில் மீண்டும் இருதரப்பினர்கள் இடையே மோதல் உருவானது.
இரண்டாம் Minsk ஒப்பந்தம் 2015:
உக்ரைனின் பிரச்னைக்குரிய கிழக்கு பகுதிகளில் பதற்றம் தனியாததால், ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள், கிழக்கு உக்ரைனின் இரு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை இணைந்து 13 புள்ளி கொள்கைகள் கொண்ட ஒப்பந்தம் ஒன்றில் பிப்ரவரி 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள், மின்ஸ்கில் ஒரே நேரத்தில் கூடி, இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அறிவிப்பையும் வெளியிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அப்பகுதிகளில் அப்போது உருவான பதற்றம் பெருமளவு தணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மின்ஸ்க் இரண்டாம் ஒப்பந்தம்:
1. உடனடி மற்றும் விரிவான போர் நிறுத்தம்.
2. இரு தரப்பிலும் அனைத்து கனரக ஆயுதங்களையும் திரும்பப் பெறுதல்.
3. OSCE மூலம் கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு.
4. உக்ரேனிய சட்டத்தின்படி, டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களுக்கான இடைக்கால சுய-அரசு பற்றிய உரையாடலைத் தொடங்கவும், பாராளுமன்றத் தீர்மானத்தின் மூலம் அவற்றின் சிறப்பு அந்தஸ்தை ஒப்புக் கொள்ளவும்.
5. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு மன்னிப்பு மற்றும் மன்னிப்பு.
6. பணயக்கைதிகள் மற்றும் கைதிகளின் பரிமாற்றம்.
7. மனிதாபிமான உதவிகளை வழங்குதல்.
8. ஓய்வூதியம் உட்பட சமூக-பொருளாதார உறவுகளை மீண்டும் தொடங்குதல்.
9. உக்ரைன் அரசாங்கத்தால் மாநில எல்லையின் முழு கட்டுப்பாட்டை மீட்டமைத்தல்.
10.அனைத்து வெளிநாட்டு ஆயுத அமைப்புகளையும், இராணுவ உபகரணங்கள் மற்றும் கூலிப்படைகளையும் திரும்பப் பெறுதல்.
11.டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பற்றிய குறிப்பிட்ட குறிப்புடன், அதிகாரப் பரவலாக்கம் உட்பட உக்ரைனில் அரசியலமைப்பு சீர்திருத்தம்.
12.டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் தேர்தல்கள் அவற்றின் பிரதிநிதிகளுடன் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.
13.ரஷ்யா, உக்ரைன் மற்றும் OSCE ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு தொடர்புக்
குழுவின் பணியை தீவிரப்படுத்துதல்.