மரணத்தின் வாயிலிருந்து அதிஷ்டவசமாக தப்பிய நாய்! வைரலாகும் வீடியோ காட்சி
கர்நாடகாவில் சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாய் ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பித்து வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா மாநிலம் கர்நாடகாவில், தட்சின் கன்னடா மாவட்டத்தில் மங்களூருவின் மூதாபித்ரே (Moodabidri or Mudbidri )பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வியாழக்கிழமை (ஜூலை 1) நள்ளிரவு 11.30 மணியளவில், ஒரு வீட்டின் வாசலில் நாய் ஒன்று தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது காம்பவுண்டு சுவற்றை தாண்டி பதுங்கி பதுங்கி வந்த சிறுத்தை ஒன்று நாயின் கழுத்துப் பகுதியில் கடித்து, லாவகமாக தூக்கிக்கொண்டு ஓடியது.
நாயை தூக்கிக்கொண்டு காம்பவுண்ட் சுவற்றின் மீது ஏற முயன்றபோது, அந்த நாய் எப்படியோ சிறுத்தையின் மரணப்பிடியிலிருந்து தப்பி திரும்ப வீட்டுக்கு ஓடியது. நாயை தவறவிட்ட ஏமாற்றத்தில் சில நொடிகள் நின்று பார்த்த சிறுத்த அங்கிருந்து தப்பிச்சென்றது.
இந்தக்காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதேபோன்றும் ஜூன் 12-ஆம் திகதி மகாராஷ்டிராவின் நாசிக் மாநிலத்தில், சிறுத்தைப் புலி ஒன்று தூங்கிக்கொண்டிருந்த நாயை கழுத்தை கடித்து அலேக்காக தூக்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.