இரு வேறு நாடுகளின் தன்பாலின அழகிகள் திருமணம்! வெளியிட்ட புகைப்படம்
அழகிப் போட்டியில் சந்தித்துக் கொண்ட அர்ஜென்டினா, போர்ட்டோ நாடுகளின் அழகிகள்
அர்ஜென்டினாவின் மரியானாவும், போர்ட்டோவின் பாபியோலாவும் திருமணம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
அர்ஜென்டினா, புயர்டோ ரிகோ நாடுகளைச் சேர்ந்த அழகிகள் திருமணம் செய்து கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மிஸ் கிராண்ட் சர்வதேச அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மரியானா வரேலா. இவரும், போர்டோ ரிகோ நாட்டின் அழகி பாபியோலா வேலெண்டினும் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர்.
அதன் பின்னர் தன்பாலின ஈர்ப்பாளர்களான இருவரும் ஒன்றாகவே வாழ தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களது காதலை ரகசியமாக வைத்திருந்தனர்.
@Marianajvarela
இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020யின் போது இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் திருமணப்பதிவு அலுவலகத்திற்கு வெளியே இருவரும் வெள்ளை நிற உடையணிந்து ஜோடியாக காணப்பட்டனர்.
source: Al Dia