பொலிசாருக்கு பயந்து ஓடிய மிஸ் ஐரோப்பா அழகிக்கு நேர்ந்த பயங்கரம்
மதுபோதையில் கார் ஓட்டியதால் பொலிசாருக்கு பயந்து ஓடிய மிஸ் ஐரோப்பா அழகி, கோரமான முடிவை சந்திக்க நேர்ந்துள்ளது.
பொலிசாருக்கு பயந்து ஓடிய மிஸ் ஐரோப்பா அழகி
துருக்கியிலுள்ள Giresun நகரில், இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, மிஸ் ஐரோப்பா அழகிப்பட்டம் பெற்றவரான Güler Erdogan (27) என்னும் இளம்பெண், இரவு விடுதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது பொலிசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பொலிசார் Gülerஐ சோதிக்கும்போது அவர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.
தான் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டி பொலிசாரிடம் பிடிபட்டுள்ளதால் பிரச்சினையை சந்திக்கப்போகிறோம் என்பதை உணர்ந்த Güler, காரை விட்டிறங்கி தப்பியோடியுள்ளார்.
பெரிய நெடுஞ்சாலை ஒன்றின் மீது அமைந்துள்ள பாலம் ஒன்றின் வழியாக தப்பியோட முயன்ற Giresun, தடுமாறி 50 அடி உயரத்திலிருந்து கிழே விழுந்துள்ளார்.
அவர் கீழே விழவும், வேகமாக வந்த ஒரு வாகனம் அவர் மீது ஏறியுள்ளது. அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், Giresun ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.
Giresun, மிஸ் ஐரோப்பா அழகிப் பட்டம் பெற்றபின், பல பிரபல பிராண்ட்களின் மொடலாக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.