மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்ட இளம்பெண்ணை ட்ரோல் செய்யும் சொந்த நாட்டு மக்கள்
பாகிஸ்தான் சார்பில் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்ட இளம்பெண்ணை அந்த நாட்டு மக்களே ட்ரோல் செய்துவருகிறார்கள்.
சொந்த நாட்டுப் பெண்ணையே ட்ரோல் செய்யும் மக்கள்
ரோமா ரியாஸ் (25) என்னும் இளம்பெண், பாகிஸ்தான் சார்பில் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டார்.

விடயம் என்னவென்றால், பாகிஸ்தான் நாட்டவர்களே அவரை சமூக ஊடகங்களில் விமர்சித்துவருகிறார்கள்.
அவர் கருப்பாக இருப்பதாகவும், குண்டாக இருப்பதாகவும், அழகாக இல்லையென்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சிலர், நீ ஒரு இந்தியப் பெண்ணைப் போல இருக்கிறாய் என்று கூட விமர்சித்துள்ளார்கள்.

இந்நிலையில், தன்னை விமர்சிப்பவர்களுக்கு சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார் ரோமா.
அந்த வீடியோவில், என் நிறம், என் நாட்டு மண்ணின் நிறம், நமது குடும்பங்களையும் நமது வீடுகளையும் கட்டி எழுப்பிய அதே பெண்களின் நிறம்தான் என் நிறமும் என்று கூறியுள்ளார் ரோமா.
அத்துடன், தனக்கு ஆதரவு தெரிவித்த இந்தியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் மற்றும் மெக்சிகோ உட்பல பல நாட்டவர்களுக்கும் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளார் ரோமா.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |