இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட உலக அழகிப்போட்டி ஒத்திவைப்பு!
கொரோனா தொற்றால் பல அழகிகள் பாதிக்கப்பட்டுள்ளால் 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி இறுதிப்போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி இறுதிச்சுற்று நேற்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. கரீபியன் தீவான ப்யூர்ட்டோ ரிக்கோவில் இந்த போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் இலங்கையை சேர்ந்த சேட் கிரீன்வுட், இந்தியாவை சேர்ந்த மானசா வாரணாசி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையல் உலக அழகி போட்டியில் பங்கேற்க இருந்த பல அழகிகள் மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் மொடல் அழகி மானசா வாரனாசியும் அடங்குவார். போட்டியாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழகிப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
போட்டி தொடங்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் நேற்று இரவு இந்த அறிவிப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டனர்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் அழகிப் போட்டி நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.