பள்ளிக்கூடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் - 51 மாணவிகள் உயிரிழப்பு
ஈரானில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 51மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது இரான் ஏவுகணைகளை வீசி வருகிறது.
இதில், பல ஏவுகணைகளை அந்த நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வானிலே தடுத்து தாக்கி அழித்து வருகிறது.
உயிரிழப்பு
அமெரிக்கா இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில், தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அமைந்துள்ள மினாப் நகரில் உள்ள ஒரு தொடக்கப் பெண்கள் பள்ளி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
Student martyrs in US attack on girls' school in #Minab reached 51.#Iran pic.twitter.com/prW4x5zfMg
— Iran Consulate - Hyderabad (@IraninHyderabad) February 28, 2026
இதில், 51 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும், 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டிருப்பது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், இந்த மோதலுக்குத் தீர்வு காண உடனடியாக ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |