போர் விதிமுறைகளை மீண்டும் மீறிய ரஷ்யா: உக்ரைனை விஷவாயு தாக்கும் அபாயம்
ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான வாசில்கிவில் (vasylkiv)பகுதி எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், எண்ணெய் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் விஷவாயு தாக்கும் அபாயத்தை உருவாகி இருப்பதாக கிளிவ்வின் துணை மேயர் மைகோலா போவோரோஸ்னிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே கடுமையான போர் நான்காவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், ரஷ்யா-உக்ரைனை அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கும் முனைப்பில் மும்முனை தாக்குதல் நடத்திவருகிறது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்து இருக்கும் நிலையில், ரஷ்யா- உக்ரைனின் எண்ணெய் கிடங்குகள் மீதும் எரிவாயு குழாய்கள் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளன.
Heavy fire after a missile attack on the KLO oil depot in Vasylkiv. #UkraineWar pic.twitter.com/WoC7O8b4II
— Reza Rahimi ??? (@rezarvhimi) February 26, 2022
அந்தவகையில், உக்ரைனின் தலைநகர் கிளிவின் தெற்கு பகுதியில் உள்ள வாசில்கிவில் எண்ணெய் கிடங்கையும் ரஷ்யா தங்கள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த ஏவுகணை தாக்குதலால் பற்றிய தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டு இருப்பதுடன், கடுமையான புகையையும் வெளியீட்டு கொண்டு இருக்கிறது.
மேலும், இதனால் உக்ரைன் தலைநகர் பகுதிகளை விஷவாயு தாக்கும் அபாயம் உருவாகி இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை நன்றாக முடிக்கொள்ளுமாறு கிளிவ்வின் துணை மேயர் மைகோலா போவோரோஸ்னிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எண்ணெய் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் ரஷ்யா போர் விதிமீறல்களில் மீண்டும் மீறியுள்ளது. இந்த தாக்குதல் உலக சுற்றுசூழலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும் என்றும் உக்ரைன் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.