மாயமான 20 பெண் சடலமாக காருடன் மீட்பு..தெரிய வந்த மரணத்தின் பின்னணி
அமெரிக்காவில் காணாமல்போன 20 இளம்பெண்ணொருவர் காருடன் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
20 வயது இளம்பெண்
கொலராடோவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் கெய்லி ரஸ்ஸல். காரில் பயணித்த இவர் கடந்த நவம்பர் 30ஆம் திகதி, தனது தந்தையை Park-N-Rideயில் இறக்கிவிட்டுள்ளார். 
தனது நண்பரின் வீட்டிற்கு செல்வதாகக் கூறி சென்ற கெய்லி காருடன் மாயமானார். அவரது தொலைபேசியில் இருந்து எந்த தரவும் பகிரப்படவில்லை. இதனால் அவரைத் தீவிரமாக தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி, ஒரு கால்வாயில் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருந்த கார் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
பிரேத பரிசோதனை
அதனுள் மீட்கப்பட்ட உடல் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. பின்னர் அது மாயமான கெய்லிதான் என்பது உறுதிசெய்யப்பட்டது.
மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையின்படி, கெய்லி காணாமல் போன நாளில் இறந்துள்ளார். அவரது மரணம் ஒரு விபத்து என்று தீர்மானிக்கப்பட்டது. 
கெய்லி ரஸ்ஸலின் குடும்பத்தினர் அவரது மரணத்தை GoFundMeயில் உறுதிப்படுத்தினர். இது அவர்களின் 28,000 டொலர்கள் இலக்கில் கிட்டத்தட்ட 24,000 டொலர்களை ஈட்டியுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |