அவன் குழந்தை அல்ல சாத்தான்! 6 வயது சிறுவனுக்கு பெற்ற தாய் செய்த கொடுமை
அமெரிக்காவில் தனது 6 வயது மகனுக்கும் பேய் இருப்பதாக நம்பும் பெண் ஒருவர் அவனை சூப்பர்மார்க்கெட்டில் விற்ற கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
அந்த சிறுவன் இப்போது இறந்துபோயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் Everman பகுதியில் நோயல் ரோட்ரிக்ஸ்-அல்வாரெஸ் (Noel Rodriguez-Alvarez) என்ற 6 வயது சிறுவன் கடந்த மார்ச் 20-ஆம் திகதி முதல் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
எவர்மேன் பொலிஸார் ஏப்ரல் 6-ஆம் திகதி சிறுவன் நோயல் இறந்த போயிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணையை மாற்றினர்.
Image: Everman Police
ஏனெனில் விசாரணையின்போது, சிறுவன் 2022-ஆம் ஆண்டு முதலே காணாமல் போனதாக Texas Child Protective Services மூலம் தெரியவந்துள்ளது.
தகவல்களின்படி, சிறுவன் நோயல் கடைசியாக ஆக்டொபர் 2022-ல் ஆரோக்கியமற்ற மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடன் ஒரு மருத்துவமனையில் காணப்பட்டுள்ளார். அப்போது அவரது தாயான சிண்டி ரோட்ரிக்ஸ்-சிங் (Cindy Rodriguez-Singh) இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்க இருந்ததாக்க கூறப்படுகிறது.
சிண்டியிடம் விசாரிக்கும்போது, நோயல் தனது தந்தையுடன் மெக்சிகோவில் இருப்பதாகக் கூறினார், ஆனால், ஆறு வயது சிறுவன் எல்லையைத் தாண்டியதற்கான எந்தப் பதிவும் இல்லை என்பதை ஹோம்லேண்ட் செக்யூரிட்டி உறுதிப்படுத்திய பின்னர் பின்னர் அது உண்மையல்ல என்று புலனாய்வாளர்கள் முடிவு செய்தனர்.
Image: Everman Police
பின்னர், ஒரு குடும்பத்தின் உறவினரிடம் விசாரிக்கும்போது, சிறுவனை 'ஃபீஸ்டா மார்க்கெட்' எனும் சூப்பர்மார்கெட்டில் ஒருவருக்கு விற்றதாக சிண்டி தனது தாயிடம் கூறியதாக பொலிஸிடம் தெரிவித்தார்.
சிண்டி அடிக்கடி தனது மகனை துஷ்பிரயோகம் செய்ததாகவும், அவனை "தீயவன்" என்றும் "சுயநலம் பிடித்தவன்" என்றும் "அவனில் சாத்தான் குடியிருக்கிறது" என்றும் கூறப்பட்டதாகவும், புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை அவன் காயப்படுத்தக்கூடும் என்று அஞ்சியதாகவும் உறைவினார்கள் கேள்விப்பட்டுள்ளனர்.
அவர் சிறுவனுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுப்பதை நிறுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் தன் சாவியால் அவனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, அவரும் அவரது தற்போதைய கணவர் அர்ஷ்தீப் சிங்கும், சிறுவன் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த்திலிருந்து இந்தியாவிற்கு அவர்களது மற்ற ஆறு குழந்தைகளுடன் சென்றது தெரியவந்துள்ளது.
Image: Everman Police
ஆனால் நோயல் அவர்களுடன் பயணிக்கவில்லை, மேலும் பல உடல் மற்றும் வளர்ச்சி சவால்களால் அவதிப்படும் அந்த சிறுவனுக்கு என்ன நடந்தது, அவன் யாருடன் இருந்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை.
அந்தக் குடும்பம் இன்னும் இந்தியாவில் எங்கோ இருப்பதாக நம்பப்படுகிறது.
அவர்கள் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, மேலும் அவர்களை மீண்டும் அமெரிக்காவிற்கு ஒப்படைக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவனை தேடும் பணியில் FBI, டெக்சாஸ் குடும்ப மற்றும் பாதுகாப்பு சேவைகள் துறை, குழந்தைகளுக்கான கூட்டணி மற்றும் காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.