6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி: கலிபோர்னியாவில் கடத்தப்பட்டவர் நார்த் கரோலினாவில் மீட்பு
6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி நார்த் கலிபோர்னியாவில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி
கலிபோர்னியாவின் துவார்டே(Duarte) பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 2ம் திகதி 5 வயது கரேன் ரோஜாஸ் என்ற சிறுமி காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க காவல் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால், கலிபோர்னியாவில் காணாமல் போன 5 வயது கரேன் ரோஜாஸ், தற்போது 11 வயதில் நார்த் கரோலினாவில் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அதிகாரிகள் வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில், சிறுமி கரேன் ரோஜாஸ் குறிப்பிட்ட பள்ளி ஒன்றில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மீட்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி வேறு பெயர் மற்றும் அடையாளத்துடன் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிகப் பழைய வழக்குகளில் இது போன்ற நேர்மறையான முடிவுகள் கிடைப்பது என்பது மிகவும் அரிது, அதிகாரிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இந்த வெற்றிக்கு காரணம் என்று வாஷிங்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட சிறுமியின் எதிர்காலம் குறித்து தீவிரமான நடவடிக்கைகளை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 2000ம் ஆண்டில் காணாமல் போன சிறுமியின் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதன் மூலம் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |