மாயமான சிறுமி இளம்பெண்ணாகத் திரும்பி வந்த விவகாரம் சூடுபிடித்தது: ஒருவர் கைது
அமெரிக்காவில் காணாமல் போன ஒரு சிறுமி, நான்கு ஆண்டுகளுக்குப் பின் இளம்பெண்ணாக பொலிஸ் நிலையம் ஒன்றை வந்தடைந்த சம்பவம் சூடுபிடித்துள்ளது.
மாயமான இளம்பெண்ணால் பதற்றம்
அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த அலிஷியா (Alicia Navarro), 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார்.
அம்மா, நான் வீட்டை விட்டு போகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால், சத்தியமாக திரும்பிவந்துவிடுவேன் என ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு அவள் மாயமாகியிருந்தாள்.
Family Handout
அவளை ஒன்லைனில் சந்தித்த யாரோ அவளை ஏமாற்றி, எங்கோ கொண்டு சென்றுவிட்டதாக அவளது தாயார் புகாரளிக்க, FBI அவளை தீவிரமாகத் தேடிவந்தது.
பொலிஸ் நிலையத்துக்கு வந்த இளம்பெண்
இந்நிலையில், சமீபத்தில், கனடா எல்லையிலுள்ள Montana மாகாண பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார்.
தான்தான் காணாமல் போன அலிஷியா என அவர் கூற, பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். உடனடியாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளார்கள்.
National Center for Missing & Exploited Children
கடந்த புதன்கிழமை அலிஷியா பொலிசாரை சந்தித்த பொலிஸ் நிலையத்தின் அருகிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றிற்குள் சுமார் 10 பொலிசார் நுழைந்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து கைவிலங்கிடப்பட்ட ஒருவர் பொலிசாரால் அந்த வீட்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளார்.
அவர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அலிஷியா திரும்பிவந்ததைத் தொடர்ந்து பொலிசாருக்கு ஆயிரக்கணக்கில் துப்புக் கிடைத்துள்ளதாம். அதன் அடிப்படையிலேயே அவர்கள் பரபரப்பாக இயங்கிவருகிறார்கள்.
Glendale Police
இதற்கிடையில், அலிஷியா எங்கு சென்றாள், நான்கு ஆண்டுகளாக எங்கிருந்தாள் என்பது போன்ற விடயங்கள் மர்மமாகவே நீடிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |