நதியோரம் கிடந்த சூட்கேஸ்... திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: அச்சமூட்டியுள்ள ஒரு செய்தி
அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு முன் கர்ப்பிணிப்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், நதி ஒன்றின் ஓரமாக கிடந்த சூட்கேஸ் ஒன்றிற்குள் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது காணாமல் போன அந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இம்மாதம் 2ஆம் திகதி, வட கரோலினாவில் வாழ்ந்துவந்த Brittany Samone Smith (28) என்ற இளம்பெண் மாயமானார்.
பொலிசார் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில், அவர் காணாமல் போன இடத்திலிருந்து 10 மைல் தொலைவில், நதி ஒன்றின் ஓரமாக ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது.
அதை திறந்து பார்த்த வழிப்போக்கர்கள் அதற்குள் ஒரு பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், அந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளார்கள்.
அந்த உடல், காணாமல் போன Brittanyயுடையதாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் கொலையாக இருக்கலாம் என்று கருதும் பொலிசார், விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்கள்.


