இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக வெளியிட்ட அந்த தகவல்: மாயமான பிரபல விளையாட்டு நட்சத்திரம்
பார்சிலோனாவில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மர்மமான முறையில் மாயமாகியுள்ள பிரித்தானிய தொழில்முறை ரக்பி வீரர் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அவருக்கு அனுப்பிய குறுந்தகவல்
பிரித்தானிய தொழில்முறை ரக்பி வீரரான லெவி டேவிஸ் மாயமானதன் இரண்டு மாதங்களுக்கு பின்னர், அவர் நண்பர் அவருக்கு அனுப்பிய குறுந்தகவல், வாசிக்கப்பட்டிருப்பதாக அவரது நெருங்கிய நண்பர் வெளிப்படுத்தியுள்ளார்.
@BPM Media
கடந்த ஆண்டு அக்டோபர் 29 முதல் ரக்பி வீரரான 24 வயது லெவி டேவிஸ் மாயமாகியுள்ளார். அவரது அலைபேசியானது பார்சிலோனாவின் பிரதான ரயில் நிலையத்தில் கடைசியாக செயல்பாட்டில் இருந்துள்ளது.
அவர் மாயமாவதற்கு முன்னர் மிரட்டப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தையும் அவரது நண்பர் வெளிப்படுத்தியுள்ளார். டிசம்பர் 15ம் திகதி நெருங்கிய நண்பர் ஒருவர், மாயமான லெவி டேவிஸுக்கு அனுப்பிய குறுந்தகவலே, வாசிக்கப்பட்டுள்ளது.
அவர் மாயமான அன்று, துப்புத்துலக்கும் பொருட்டு பொலிசார் அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டிருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது டிசம்பர் மாதம் அவரது அலைபேசியில் குறுந்தகவலை அவர் வாசித்துள்ளதாக கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கசியமாக பயன்படுத்துகிறார்
லெவி டேவிஸ் அந்த குறுந்தகவலை தாமாகவே வாசித்திருக்கிறார் அல்லது அவரது அலைபேசியை இன்னொருவர் ரகசியமாக பயன்படுத்துகிறார் என கூறுகின்றனர்.
@getty
விளையாட்டுக் களத்தில் பிரபலமாக இருக்கும் போதே இருபாலின ஈர்ப்பாளர் தாம் என வெளிப்படையாக அறிவித்த முதல் ரக்பி வீரர் என்ற பெருமையைப் பெற்ற லெவி, காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்பு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், தன்னையும் தமது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக சிலகுற்றவாளிகளால் மிரட்டப்படுவதாக அவர் பதிவு செய்திருந்தார்.
தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், புரிந்துகொண்டு நடவடிக்கை எடுங்கள் என அவர் கெஞ்சியுள்ளார்.