அமெரிக்காவில் மாயமான ஆறு வயது சிறுமி இரண்டே மணி நேரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி... 14 வயது சிறுவன் கைது
அமெரிக்காவின் இண்டியானாவில் ஆறு வயது சிறுமி கடந்த வெள்ளியன்று திடீரென மாயமானார்.
Grace Ross என்ற அந்த சிறுமி காணாமல் போய் இரண்டே மணி நேரத்தில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. ஆம், Graceஐ தேடும் பணியில் இறங்கியவர்கள், அவரது உடல் மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில் கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக, Grace உயிரிழந்த வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சிறுவன் என்பதால், அவரது பெயர், புகைப்படம் முதலான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
சற்று முன்வரை விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இறந்துபோனார் என்ற செய்தியை ஏற்றுக்கொள்ள இயலாமல், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
யாரைப் பார்த்தாலும் புன்னகையுடன், எனது பெயர் கிரேஸ், எனக்கு ஆறு வயது என்பாராம் Grace.
தனது நகைகளை போட்டுக்கொள்ளவேண்டும் என தன் பேத்தி எப்போதும் கூறுவார் என்றும், ஆனால், அதையெல்லாம் போடும் வயது வரும் முன்னே இவ்வுலகத்தைவிட்டே போய்விட்டாள் என்றும் கதறுகிறார் Graceஇன் பாட்டி.



