மாயமான மலேசிய விமானம்... மீனவர் ஒருவர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்
மாயமான மலேசிய விமானம் MH370 என்ன ஆனது என்ற மர்மம் இதுவரை விலகாத நிலையில் ஒரு முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் தேடவேண்டிய இடம்
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 கடந்த 2014 மார்ச் மாதம் 8ம் திகதி 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் மாயமான அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் என கூறப்படும் பொருட்கள் சிக்கியிருந்தாலும், அந்த விமானம் என்ன ஆனது என்பது தொடர்பில் எந்த தகவலும் இதுவரை இல்லை.
@dailymail
ஆனால் 77 வயதான முன்னாள் மீனவர் Kit Olver என்பவர் தெரிவிக்கையில், அதிகாரிகள் தேடவேண்டிய இடம் தமக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார். 2014 செப்டம்பர் அல்லது அக்டோபரில் தமது ஆழ்கடல் இழுவை படகானது வணிக விமானத்தின் இறக்கை போன்ற ஒருபகுதியில் மோதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறக்க முடியாத தருணம்
மேலும், தெற்கு அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் இருந்து சுமார் 55 கிமீ தொலைவில் தெற்கு பெருங்கடலில் அப்போது அவர் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
@dailymail
உண்மையில் மறக்க முடியாத தருணம் அதுவென்றும், மலேசிய விமானம் தொடர்பில் தாம் பலமுறை விவாதித்தது உண்டு என்றும், ஆனால் எனது பார்வையில் அதன் பாகங்கள் சிக்கும் என்பதை கனவிலும் நினைக்கவில்லை என்றார்.
விமானிகளுக்கான உரிமம் பெற்றுள்ள Kit Olver குட்டி விமானங்கல் பலவற்றை இயக்கியும் உள்ளார். இதனாலையே, தமது படகு மோதியது பயணிகள் விமானத்தின் இறக்கை என்று அவர் உறுதிபட தெரிவிக்கிறார்.
@getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |