கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆடைகள் இல்லாமல் ப்ரீஸருக்குள் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்: ஒரு அதிர்ச்சி சம்பவம்
தன் முன்னாள் காதலியும், தன் மகனின் தாயுமான இளம்பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காணாததால் அவரைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் அந்த பெண்ணின் முன்னாள் காதலர்.
வெனிசுலாவைச் சேர்ந்த Ana Gabriela Medina Blanco (19) என்ற அந்த இளம்பெண், அடிக்கடி தலைநகர் Caracasக்கு செல்லும் வழக்கம் உடையவர் என்பதால் அவரது குடும்பத்தினர் யாரும் அவரைத் தேடவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், Gabrielaவுக்கு என்ன ஆயிற்று என்று அறிவதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற அவரது முன்னாள் கணவர், அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் எங்கிருந்து அந்த துர்நாற்றம் வீசுகிறது என்று தேடும்போது, ப்ரீஸருக்குள் அவர் கண்ட காட்சி அவரைத் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது.
ஆம், அந்த ப்ரீஸருக்குள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையைப் போல Gabrielaவின் உடல் வளைத்து அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
உடனடியாக அவர் பொலிசாரை அழைக்க, அவர்கள் வந்து Gabrielaவின் உடலை வெளியே எடுத்துள்ளார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் உடலில் ஸ்குரூடிரைவரால் 50 முறை குத்தப்பட்ட காயங்களுடன் அவரது உடல் இருந்திருக்கிறது.
Gabrielaவின் இந்நாள் காதலரான Caracasஐச் சேர்ந்த Josue என்பவர்தான் அவரைக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால், அவர் சந்தேக குணமுடையவர் என்றும் Gabrielaவை கொடுமைப்படுத்துவார் என்றும் அக்கம் பக்கத்தவர்கள் கூறியுள்ளனர்.
Josue தலைமறைவாகிவிட்ட நிலையில், பொலிசார் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.