பிரித்தானியாவில் 17 வயது சிறுவனை காணவில்லை: பயனளிக்காத 3 நாள் தீவிர தேடல்
பிரித்தானியாவில் 17 வயது சிறுவன் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
கடைசியாக நீருக்கு அருகில் பார்க்கப்பட்ட சிறுவன்
பிரித்தானியாவில் கடந்த மூன்று நாட்களாக தேடப்பட்டு வரும் காணாமல் போன 17 வயது சிறுவன் Menai நீரிணைக்கு அருகிலுள்ள நீரில் புகுந்ததை கடைசியாக பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
17 வயது சிறுவன் காணாமல் போய் 3 நாட்களை கடந்துள்ள நிலையில் சிறுவனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிறுவன் காணாமல் போன போது கடைசியாக ஜீன்ஸ் மற்றும் ஊதா நிற ஹூடி அணிந்திருந்ததாக சிறுவன் விவரிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், Menai நீரிணை-க்கு அருகில் சிறுவன் கடைசியாக பார்க்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை சுற்றி பல அமைப்புகளின் உதவியுடன் விரிவான தேடலை வடக்கு வேல்ஸ் பொலிஸ் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
தொடரும் தேடல் பணி
சிறப்பு அதிகாரிகளின் உதவியுடன் இந்த வாரம் ட்ரோன் தேடல்கள் தொடரும் என்று பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வடக்கு வேல்ஸ் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் Stephen Pawson, சிறுவனின் குடும்பத்துடன் தனது எண்ணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் எந்தவொரு சாத்தியமான காட்சிகளையும் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்றும் Pawson தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |