லெபனான் மக்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முக்கிய செய்தி! 300 தாண்டிய உயிரிழப்பு
லெபனான் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் நடவடிக்கை தற்போது இஸ்ரேலிய படைகளும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்குமான சண்டையாக மாறியுள்ளது.
இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் செய்தி
இந்நிலையில் லெபனான் மீதான வான்வழி தாக்குதலுக்கு மத்தியில் அந்நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தங்களுடைய போர் லெபனான் நாட்டு மக்களுடன் இல்லை, ஹிஸ்புல்லாவுடன் என்று பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
“ஹிஸ்புல்லா லெபனான் மக்களை கேடயமாக பயன்படுத்த வேண்டாம், தயவுசெய்து உடனடியாக தீங்கு விளைவிக்கும் பாதையில் இருந்து வெளியேறுங்கள்” என தெரிவித்துள்ளார்.
Message for the people of Lebanon: pic.twitter.com/gNVNLUlvjm
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) September 23, 2024
Hertfordshire பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை: குவிந்த 260 வெள்ள அறிக்கைகள்: 45 சொத்துக்கள் பாதிப்பு!
மேலும் இஸ்ரேலிய இராணுவத்தின் வெளியேற்ற எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் லெபனான் மக்களுக்கு நெதன்யாகு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் இஸ்ரேலிய படைகளின் செயல்பாடு முடிவடைந்த உடன் லெபனான் மக்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு பத்திரமாக திரும்பி வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |