இலங்கையில் அடுத்தடுத்து பதவி விலகும் ஆளுநர்கள்: நாட்டின் புதிய பிரதமர் யார்?
இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பல அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பதவி விலகி வருகின்றனர்.
ஆளுநர்கள் பதவி விலகல்
9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தன்னுடைய பதவி விலகல் தொடர்பான கடிதத்தை முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், வடமத்திய மாகாண ஆளுநர் மகிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் தங்களுடைய ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
Hertfordshire பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை: குவிந்த 260 வெள்ள அறிக்கைகள்: 45 சொத்துக்கள் பாதிப்பு!
நேற்றைய தினம் தினம் தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன பதவி விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பல அமைச்சர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் பதவி விலகல்
அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதை தொடர்ந்து, இன்று காலை தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அநுர குமார திஸாநாயக்க தரப்பின் புதிய பிரதமர் யார் என்பது இன்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |