கனடாவில் ஒன்றரை மாதமாக காணாமல் போன இளம்பெண்! ஆனால் சில நாட்களுக்கு முன்னரே பொலிஸ் புகார் கொடுத்த குடும்பம்
கனடாவில் ஒரு மாதத்துக்கு மேலாக காணாமல் போன இளம்பெண் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்தவர் ஜியேன்னி மெக்கன்னி (29).
இவர் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி காணாமல் போனார்.
ஆனால் மெக்கன்னி காணாமல் போனதாக கடந்த 26ஆம் திகதி தான் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
எதற்காக அவர்கள் தாமதப்படுத்தினர் என்ற விபரம் தெரியவில்லை.
மாயமான மெக்கன்னி ஐந்து அடி 6 ஆறு அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார்.
அவர் காணாமல் போய் ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டதால் அவரின் நிலை குறித்து பொலிசார் அக்கறையும் கவலையும் கொண்டுள்ளார்.
மெக்கன்னி குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.