அமெரிக்காவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 11 ஸ்கை டைவிங் வீரர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் பட்லர் நகரில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை மிசோரி மாநில நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

அதன்படி, சிறிய ரக விமானம் நேற்று அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் இருந்து புறப்பட்டுள்ளது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பட்லர் நினைவு விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது ஸ்கை டைவிங் செய்யும் 11 சாகச வீரர்கள் உட்பட 12 பேர் விமானத்தில் பயணித்த நிலையில் 12 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து குறித்து அறிந்த மீட்பு குழுவினர் அங்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |