வாணவேடிக்கை காட்டிய மார்ஷ்! 52 ரன் வாரி வழங்கிய பாகிஸ்தான் வீரர்..233 ஓட்டங்கள் இலக்கு
பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வீரர் மிட்செல் மார்ஷ் 51 பந்துகளில் 88 ஓட்டங்கள் விளாசினார்.
மிட்செல் மார்ஷ் சரவெடி ஆட்டம்
அடிலெய்டு மைதானத்தில் நடந்து வரும் பிக் பாஷ் போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
The Perth Scorchers just scored 69 runs off the powerplay 🤯 #BBL15 pic.twitter.com/UUbkQZARbO
— KFC Big Bash League (@BBL) January 11, 2026
நாணய சுழற்சியில் வென்ற அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் துடுப்பாடியது.
ஃபின் ஆலன் (Finn Allen) அதிரடியாக 16 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து கொனோலி டக்அவுட் ஆக மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) ருத்ரதாண்டவம் ஆடினார். மறுமுனையில் ஜோஷ் இங்கிலிஷ் (Josh Inglis) வாணவேடிக்கை காட்டினார். அவர் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசினார்.
42 off 23 balls for Josh Inglis, and didn't he play some entertaining shots 😍 #BBL15 pic.twitter.com/E2JSRsvwa5
— KFC Big Bash League (@BBL) January 11, 2026
232 ஓட்டங்கள் குவிப்பு
ஆரோன் ஹார்டி (Aaron Hardie) 22 பந்துகளில் 34 ஓட்டங்கள் குவித்தார். இந்த சீஸனின் 400வது சிக்ஸரை விளாசிய மிட்செல் மார்ஷ், 51 பந்துகளில் 88 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் பெர்த் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ஓட்டங்கள் குவித்தது. போப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆனால், இங்கிலாந்தின் லுக் வுட் 58 ஓட்டங்களும், பாகிஸ்தானின் ஹஸன் அலி 52 ஓட்டங்களும் வாரி வழங்கினர்.
Amongst all the carnage, that's a super spell from Lloyd Pope 👏 #BBL15 pic.twitter.com/sLVMqZ9y7T
— KFC Big Bash League (@BBL) January 11, 2026
Photo: Getty Images
Photo: Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |