ரிஷாப் பண்ட்டிற்கு என்ன ஆனது? இன்றைய போட்டியில் திடீர் விலகல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக, இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷாப் பண்ட்
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று வதோதாராவில் நடக்க உள்ளது.
Photo: PTI
இப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இடம்பெற்றிருந்தார். ஆனால், வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.
வதோதரா பயிற்சி அமர்வின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அதில் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) காயத்தினால் அவதிப்படுவது தெரிய வருகிறது.
விலகல்
பண்டிற்கு உடனடியாக அணியின் மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், காயம் குறித்த கவலைகள் மேலதிகப் பரிசோதனைக்கு வழிவகுத்தன.
இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து ரிஷாப் பண்ட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Photo: AP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |