மிட்செல் மார்ஷ் 49 பந்துகளில் சதம் விளாசியும் வீண்: தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
Mitchell marsh century wasted england win series: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் மிட்செல் மார்ஷ் சதம் விளாசினார்.
சிட்னியில் நடந்த 4வது டி20 போட்டியில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் 49 பந்துகளில் சதம் விளாசினார்.
சாம் கர்ரன் அபாரம்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி சிட்னியில் நடந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் எடுத்தது.
சாம் கர்ரன் 28 பந்துகளில் 50 ஓட்டங்களும், ஜேம்ஸ் கோல்ஸ் 33 ஓட்டங்களும் விளாசினர். ஸ்பென்சர் ஜான்சன், ரிலே மெரிடித் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
மிட்செல் மார்ஷ் சதம்
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 49 பந்துகளில் சதம் விளாசினார்.

தனியாளாக வெற்றிக்காக போராடிய அவர் 57 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 119 ஓட்டங்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தில் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட, அவுஸ்திரேலியா ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
SERIES WIN IN SYDNEY 😍 https://t.co/UemjwMnNnZ
— England Cricket (@englandcricket) November 29, 2026