ஒழுங்காக குளிர்பானங்களை சுமந்து செல் - வர்ணனையாளர் சைமன் டூலின் பேச்சால் சர்ச்சை
ஒழுங்காக குளிர்பானங்களை சுமந்து செல் என்று வர்ணனையாளர் சைமன் டூலின் கூறிய கருத்தால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
கொல்கத்தா அணி, பெங்களூரு அணி இன்று மோதல்
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடைபெற்று வரும் கொல்கத்தா அணி 2 வெற்றி பெற்றுள்ளது. 5 தோல்வியை தழுவியுள்ளது. ஐசிசி வெளியிட்ட தர வரிசை பட்டியலில் கொல்கத்தா அணி 8-வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியது. இதனால், கொல்கத்தா அணி நெருக்கடியில் தவித்து வருகிறது. இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு அணியை நேருக்கு நேர் மோத உள்ளது.
வர்ணனையாளர் சைமன் டூலின் பேச்சால் சர்ச்சை
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின்போது எடுக்கப்பட்ட நேர்காணலில், சென்னை வீரர் சாண்ட்னரிடம், ‘ஒழுங்காக குளிர்பானங்களை சுமந்து செல்லுங்கள்’ என்று வர்ணனையாளர் சைமன் டூல் கூறினார்.
அதற்கு சென்னை வீரர் சாண்ட்னரும் ‘முயற்சி செய்கிறேன்’ என்று பதிலளித்தார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வர்ணனையாளர் சைமன் டூலை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், சைமன் டூலும், சாண்ட்னரும் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள். இவர்கள் நண்பர்கள்.
இதனால், ஜாலியாகதான் பேசியிருப்பார்கள். ஆனால், இதுதான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. மனமுடைந்த மிட்சல் சாண்ட்னர் ரசிகர்கள் இத்தகைய பேச்சு முறையானது அல்ல என்று சைமன் டூலை விமர்சம் செய்து வருகின்றனர்.
Simon Doull : Carry the drinks well ?
— CSK Fans Army™ (@CSKFansArmy) April 25, 2023
Santner : I will try (Smiles) ?#WhistlePodu #IPL2023 #CSK pic.twitter.com/zUDw1FMkHV