அவுஸ்திரேலிய அணிக்கு விழுந்த அடுத்த அடி: சாம்பியன்ஸ் டிராஃபியில் முக்கிய வீரர் விலகல்
வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளதால் அவுஸ்திரேலிய அணிக்கு சாம்பியன்ஸ் டிராஃபியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராஃபி
பாகிஸ்தானில் 19ஆம் திகதி சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் தொடங்குகிறது. இதற்கான அவுஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான இந்த அணியில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், லபுஷேன், ஆடம் ஜம்பா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்டார்க் விலகல்
ஆனால், முக்கிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) விலகியுள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், மார்க் ஸ்டோய்னிஸ், பேட் கம்மின்ஸ் ஆகியோர் இல்லாத நிலையில், ஸ்டார்க்கும் விலகியுள்ளது அவுஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |