கோவிஷீல்டு-கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக்கொண்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? ஆய்வில் தெரியவந்த முக்கிய தகவல்
கோவிஷீல்டு-கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக்கொண்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து ஐசிஎம்ஆர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜான்சன் ஜான்சன் நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் விநியோகிக்க, மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் இப்போதைக்கு கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா மற்றும் ஜான்சன் ஜான்சன் ஆகிய 5 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் கோவிஷீல்டு-கோவாக்சின் தடுப்பூசியை கலந்து போடுவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது.
கோவிஷீல்டு-கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து போடும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
முதல் டோஸ் கோவிஷீல்டு, 2வது டோஸ் கோவாக்சின் என தடுப்பூசிகளைப் மாற்றிப் போட்டுக் கொண்டல் எந்தவொரு பாதிப்புமில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.