ஆஸ்கர் விருது குழுவில் கமல்ஹாசன்.., வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கமலுக்கு வாழ்த்து
ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து பதிவில், "உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல் ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!
மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது!" என்று கூறியுள்ளார்.
இவரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கமல் ஹாசன் தனது பதிவில், "ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |