முக ஸ்டாலின் சைக்கிளில் சென்ற போது செய்த தவறு! இதை கவனித்தீர்களா?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் மகாபலிபுரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
அவருடன் பாதுகாப்பாக மற்றவர்களும் சைக்கிளில் பயணித்தனர், எப்போதும் தன் உடல்நலனில் அதிக அக்கறை கொண்ட ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பொறுப்பேற்று முதல்முறையாக சைக்கிளில் பயணித்தார்.
அவரை பார்த்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.
முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் ஸ்டாலின்.
ஆனால் அன்றைய தினம் அவர் முகக்கவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவருடன் சென்றவர்கள் எவரும் முக கவசம் அணியாமல் சைக்கிள் ஓட்டி வந்தனர்.
சைக்கிளில் அப்படி என்ன ஸ்பெஷல்?
சைக்கிளை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் 'டெய்ஜோ'. சென்னை அம்பத்துாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூன்று வகை சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.
இதில் 81 ஆயிரத்து 500 ரூபாய் விலை உடைய 'பெடல்ஸ் சி2' என்ற வகை சைக்கிளையே முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார். 120 கிலோ எடை வரை உள்ள நபர்கள் மட்டுமே இந்த சைக்கிளை பயன்படுத்த முடியும்.
48 செ.மீ. நீளம் உள்ள சைக்கிளின் 'பிரேம்' அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. 7.0 ஏ.எச். 'லித்தியம் அயன் பேட்டரி' உடைய 250 வாட்ஸ் திறன் உடைய மோட்டார் இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது.
ஏழு 'கியர்கள்' உடைய இந்த சைக்கிளை பெடல் செய்தால் மட்டுமே இயக்க முடியும். சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பெடல் செய்வதை எளிமைப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
எல்.சி.டி. திரை பொருத்தப்பட்டுள்ளது. சைக்கிளின் முன்புறம் பின்புறம் 25 எல்.யு.எக்ஸ். அளவு உடைய எல்.இ.டி. 'லைட்' பொருத்தப் பட்டுள்ளது.