மாநில அரசே இந்தியை திணிப்பதுதான் மாற்றமா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
mk stalin slams tvk government for hindi name board: மாநில அரசே இந்தியை திணிப்பதுதான் மாற்றமா என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில அரசே இந்தியை திணிப்பதுதான் மாற்றமா?
சாத்தான்குளத்தில் தமிழக மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் ஊரின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி இடம் பெற்றிருந்தது.

தமிழ்நாடு அரசு பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டிருந்த நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இந்தியில் ஊர் பெயர்கள் இருந்தது சர்ச்சையானது.
மாநில அரசே இந்தியை திணிப்பதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
— M.K.Stalin (@mkstalin) October 2, 2026
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில… https://t.co/mJjBi5hW4Y
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தி எழுத்துக்கள் மறைக்கப்பட்டதோடு, நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.