கொரோனா வார்டுக்கு நேரில் சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்! புகைப்படங்கள்
தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவைக்கு கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்ள சென்றிருக்கிறார்.
அதன்படி கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார்.
பாதுகாப்போடு சென்ற முதல்வர் அங்கிருந்த நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை குறித்து கனிவோடு கேட்டறிந்தார்.
#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 30, 2021
மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.
தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! pic.twitter.com/lXNI6oebWI
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரும் முதல்வரின் செயலை பாராட்டியுள்ளனர்.
இதன்பிறகு ஸ்டாலின் கூறுகையில், உயிரை பணயம் வைத்துப் போராடும் முன்களப் பணியாளர்கள், நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டவே கொரோனா வார்டுக்குள் சென்றேன் என விளக்கமளித்துள்ளார்.
#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!
— M.K.Stalin (@mkstalin) May 30, 2021
இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்! pic.twitter.com/bs2TeyhtxX