ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட நடமாடும் தூதரக சேவை
Mobile Embassy Services for Srilankan in Denmark: டென்மார்க்கில் வாழும் இலங்கை நாட்டவர்களுக்காக நடமாடும் தூதரக சேவை நடத்தப்பட்டுள்ளது.
நடமாடும் தூதரகம்
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், இலங்கையர்கள் மற்றும் தமிழர்களுக்கான நடமாடும் தூதரக சேவைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
டென்மார்க்கில் நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கான தூதரக சேவைகளை இலகுவாக வழங்கும் நோக்கில் ஸ்வீடனின் ஸ்டொக்ஹோமில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரிலும் நடமாடும் தூதரக சேவை வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த தமிழர்கள் உட்பட இலங்கையர்கள் பிரதான தூதரக சேவைகளை பெறுவதற்கான ஒத்துழைப்புகள் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிறப்புப் பதிவு, கடவுச்சீட்டுகளை புதுப்பித்தல், இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களை உறுதிப்படுத்தல் ஆகியவையும் முக்கிய சேவைகளாக வழங்கப்பட்டது.