செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை.. 20 நிமிடத்தில் முடிவு.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரிசோதனைக்காக ஆர்.டி.பி.சி.ஆர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முடிவுகள் வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைகழக பேராசிரியர் கூறியதாவது, இந்த சோதனை எங்கும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையான முறையில் நாங்கள் தயாரித்துள்ளோம். இதன்மூலம் ஸ்மார்ட்போனின் உணர்த்தும் கருவியை இயக்கவும் முடிவை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நிலையான வெப்பநிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதால் வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகிறது. இதையடுத்து 20 நிமிடங்களில் முடிவையும் அளித்து விடுகிறது.
இதில் பயன்படுத்தக்கூடிய Detector ஒரே நேரத்தில் நான்கு மாதிரிகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. அதுமட்டும் இல்லமல் இந்த சோதனையின் முடிவு மிகத்துல்லியமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஹார்மனி பரிசோதனை முறையை வீட்டு உபயோகத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றி அமைக்க விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.